நலன்புரி நன்மைகள் சபையின் எண்ணீட்டு பணிகளை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கல்.

நலன்புரி நன்மைகள் சபையினால் மேற்கொள்ளப்படும் நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையான பயனாளிகளின் தகவல்களை எண்ணீட்டிற்கு உட்படுத்தும் செயற்பாடுகள் நாடளாவியரீதியில் உள்ள பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் எமது பிரதேச செயலக பிரிவில் பெற்றுக்கொள்ளப்பட்ட 6041 விண்ணப்ப படிவங்களுக்குமான எண்ணீட்டு பணிகள் பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களின் அர்பணிப்பான சேவையுடன் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டு பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இவ் எண்ணீட்டு பணிகளில் ஈடுபட்ட எண்ணீட்டாளர்களுக்கான நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்படும் முதற்கட்ட கொடுப்பனவுகளை  கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 03.04.2023 அன்று பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவருபன், கணக்காளர் திரு.கே.ரிஸ்வி யாஹசர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவுகளை வழங்கி வைத்ததுடன் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

wbb payments 2023 6

wbb payments 2023 8

wbb payments 2023 9

wbb payments 2023 4

wbb payments 2023 10

wbb payments 2023 5

wbb payments 2023 3

wbb payments 2023 7

wbb payments 2023 1

wbb payments 2023 2

~s

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top