“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ் “QUEEN KIDDANGI PARK” பாரம்பரிய கால்வாய் படகுச் சவாரி திட்டம் ஆரம்பித்து வைப்பு

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவின் சவளக்கடை மற்றும் சொறிக்கல்முனை-01 கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்த வகையில் “QUEEN KIDDANGI PARK” எனும் பெயரிலான பாரம்பரிய கால்வாய் படகுச் சவாரி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 ஜூன் 02 ஆம் திகதி இடம்பெற்றது.

 713484728 1374433588071386 7048862939123815037 n

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ L. G. வசந்த பியதிஸ்ஸ அவர்களும் விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்ரமராச்சி அவர்களும், அமைச்சின் செயலாளர் பண்டார ஆகியோர் கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் A. I. மஹ்ரூப், திட்டமிடல் பணிப்பாளர் M. A. முனாஸிர், கணக்காளர் I. M. பாரிஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A. A. H. M. அதிகாரி, நாவிதன்வௌி பிரதேச சபை தவிசாளர் திரு. I. ரூபசாந்தன் அவர்கள், சவளக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இந்ரஜித் டி சில்வா மற்றும் நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் O. G. கீர்த்தி குசுமிந்த, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. பு. நித்தியானந்தன், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி சபை தவிசாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
இத்திட்டத்திற்கு அமைவாக நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை-03 கிராம அலுவலர் பிரிவில் கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக தச்சுத்தொழில் திறன் மற்றும் விற்பனை மேம்பாட்டு முயற்சி, மத்தியமுகாம்-3 கிராம அலுவலர் பிரிவில் பாதிப்புற்ற பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான தயிர், நெய் மற்றும் பால்ரொபி உற்பத்தி திட்டம், நாவிதன்வௌி-02 கிராம அலுவலர் பிரிவில் தேங்காய் அடிப்படையிலான மதிப்பூட்டல் மற்றும் சிறு நடுத்தர தொழில் (MSME) அபிவிருத்தி நிலையம் அமைத்தல் ஆகிய வேலைத்திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகளும் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் குறித்த தினத்தில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள், சமூக அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

▶ View Full image gallery of the event

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top