2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழான அறிவித்தல்

அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும். இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசு 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கான தகவலறியும் உரிமையை அடிப்படை உரிமையொன்றாக உறுதிப்படுத்தியுள்ளது.

















