பிரதேச செயலாளருக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் - 2023

எமது பிரதேச செயலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி தனது நிறைவான சேவையை நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்கள் இடமாற்றலாகி செல்வதனை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் ஜூலை 31ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் திரு.க.ரிஸ்வி யாஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பு.நித்தியானந்தன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் ஆகியோர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும், கிளைத்தலைவர்களான பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய சகல அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளருக்கான அன்பளிப்புக்கள் மற்றும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

DS Farewell 2023 1

DS Farewell 2023 2

DS Farewell 2023 3

DS Farewell 2023 4

DS Farewell 2023 5

DS Farewell 2023 6

DS Farewell 2023 7

DS Farewell 2023 8

DS Farewell 2023 9

DS Farewell 2023 10

DS Farewell 2023 11

DS Farewell 2023 12

DS Farewell 2023 13

 

~s

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top