விவசாய பயனாளிகளுக்கான விவசாய உபகரணம் வழங்கல்
நாவிதன்வெளி பிரதேச செயலக சவளக்கடை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட விவசாயக் குழு உறுப்பினர்களுக்கு வீட்டுத்தோட்ட செய்கைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் 2023.10.11 ஆந் திகதியன்று சவளக்கடை கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்கள் கலந்து கொண்டு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சவளக்கடை கிராம அலுவர் பிரிவிற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவிதன்வெளி பிரதேச அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் களச் செயலாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


















