உலக உணவுத்திட்டம் மூலமான உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் 2023.11.09 ஆந் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான 15000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஏ. அனீஸ், உலக உணவு திட்டத்தின் இணைப்பாளர் திரு.ச.பாக்கியநாதன், பிரதேச செயலக கணக்காளர் திரு.க.றிஸ்வி யஹ்ஸர், பிரதேச  செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிர்வாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

wfp food pack 2023 1

wfp food pack 2023 2

wfp food pack 2023 3

wfp food pack 2023 4

wfp food pack 2023 5

wfp food pack 2023 6

wfp food pack 2023 7

wfp food pack 2023 8

wfp food pack 2023 9

wfp food pack 2023 10

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top