பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வானது 2023.11.20 ஆந் திகதியன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, கணக்காளர் திரு.க.றிஸ்வி யாஹ்சர், நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.செ.சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீருடையுடன் கலந்து கொண்டனர்.
























