பிரதேச செயலக பெயர்ப்பலகை நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்- 2023
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக, பிரதேச செயலக பெயர்ப்பலகைக்கான நிர்மாண பணிகள் 2023.12.05 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், கணக்காளர் திரு.க.றிஸ்வி யாஹ்சர், நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.செ.சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பு.நித்தியானந்தன் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.























