வர்ண விருதுகள் 2024
நாவிதன்வௌி பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, சிறந்த அடைவுமட்டங்களை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவர்கள், பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனைய துறைசார் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைக்கும் வர்ண விருதுகள் (Colours Awards - 2024) நிகழ்வானது 2024.01.18 ஆந் திகதி நாவிதன்வௌி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.சிந்தன அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டதுடன் மேலும் அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.H.B.அனீஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். இவர்களுடன் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, கணக்காளர் திரு.க.றிஸ்வி யாஹ்சர், நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.செ.சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பு.நித்தியானந்தன் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய நாவிதன்வௌி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






































