மெழுகுதிரி உற்பத்தி செய்யும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் நெசவு உற்பத்தியினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கான நூல் வழங்கும் நிகழ்வு
நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் இழப்பீடுகளுக்கான அலுவலக நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து "நம்பிக்கைக்கான நூல்" மற்றும் "வாழ்க்கைக்கான வெளிச்சம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராம அலுவலர் பிரிவில் மெழுகுதிரி உற்பத்தி செய்யும் பயனாளிகளுக்கான
உபகரணங்கள் வழங்கல் மற்றும் சாளம்பைக்கேணி -04 கிராம அலுவலர்பிரிவில் நெசவு உற்பத்தியினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கான நூல் வழங்கும் நிகழ்வு என்பன உதவிப் பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன் அவர்களின் தலைமையில் 2024.03.15 ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் இழப்பீடுகளுக்கான அலுவலக பணிப்பாளர் திருமதி. அனுராதி பெரேரா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே. ஜெகதீசன், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பொருட்களை வழங்கி வைத்தார்.





















