77ஆவது சுதந்திர தின நிகழ்வு மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய அலுவலக சீருடை அறிமுகம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதான சுதந்திர தின நிகழ்வு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக சீருடை அறிமுக நிகழ்வு ஆகியன பிரதேச செயலக வளாகத்தில் 2025 பெப்ரவரி 04 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டது. இலங்கை திருநாட்டின் இன மத பல்லினத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடையில் பாடசாலை சிறுவர்களும் பங்குபற்றினர். சுதந்திர தினம் தொடர்பில் பிரதேச செயலாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்று நடுகையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாவிதன்வௌி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு. ஓ. கே. கீர்த்தி குசுமிந்த, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. மனோஜ் இந்ரஜித், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம் ஆகியோரும் சகல பிரிவுகளின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக, வௌிக்கள உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய சகல உத்தியோகத்தர்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீருடையுடன் கலந்து கொண்டனர்.

இதேவேளை பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளிலும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

 Independence Day 2025 1

Independence Day 2025 2

Independence Day 2025 3

Independence Day 2025 4

Independence Day 2025 5

Independence Day 2025 6

Independence Day 2025 7

Independence Day 2025 8

Independence Day 2025 9

Independence Day 2025 10

Independence Day 2025 11

Independence Day 2025 15

Independence Day 2025 16

Independence Day 2025 17

Independence Day 2025 18

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top