அனர்த்த முன்னாயத்த நிலை தொடர்பான கலந்துரையாடல்
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைகாலத்தின் போதான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் நாவிதன்வௌி கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 2025.10.16ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நாவிதன்வௌி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. சீ. நிருபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம் அவர்களுடன் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் கலந்து கொண்டதுடன் நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவு மற்றும் கல்முனை பிரதேசங்களுக்குட்பட்ட அரச திணைக்களங்களான அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், பொலிஸ் நிலையம், கடற்படை முகாம், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை, ஶ்ரீலங்கா டெலிகொம், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, லங்கா சதோச, வலயக்கல்வி அதிகாரி பணிமனை போன்றவற்றின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
குறித்த காலங்களின் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கான முன்னாயத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயற்ப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் இக்கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்டன.
















