"அகன்று செல்" எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம் நாவிதன்வௌி பிரதேச செயலகத்தில் ஆரம்பம்
போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான சனாதிபதி செயலகத்தின் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டின் “அகன்று செல்” எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு பிரதேச செயலக மட்டத்திலான விழிப்புணர்வு பேரணியும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரதேச செயலக தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் A.K. ஹனா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. மனோஜ் இந்ரஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. பு. நித்தியானந்தன் ஆகியோருடன் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக மற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். மேலும், இவ்வேலைத்திட்டம் தொடர்பான தௌிவூட்டல்களும் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.
















