சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா - 2022

இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு தேசியஇலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு தேசியவிருது விழாவில் (வடக்கு மற்றும் கிழக்கு)நாவிதன்வெளி பிரதேச செயலகமானது 2019, 2020, 2021 ஆகிய மூன்று வருடங்களுக்கான விருதினை பெற்றுக்கொண்டது.

அத்துடன் இந்த வெற்றியானது பிரதேச செயலாளர் தலைமையில், அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும்  பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிரதேச செயலகம் சார்பில் பிரதேச செயலாளர் திரு.எஸ். ரங்கநாதன் அவர்கள் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

social sec award 2022 3

social sec award 2022 1  social sec award 2022 2

social sec award 2022 3

மேலும் 2020ஆம் ஆண்டிற்கான அதிகூடிய பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட  நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுமதி ரஞ்சன் அவர்களும் விருதினை பெற்றுக்கொண்டார்.

 social sec award 2022 4

இத்துடன் தேசிய அடைவு மட்டத்தை எட்டியமைக்காக கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களும் கெளரவிக்கப்பட்டன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து  நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிபளை, மண்முனை வடக்கு, செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகங்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து தம்பலகாமம் பிரதேச செயலகமும் கெளரவிக்கப்பட்டன.

social sec award 2022 5

சமூக பாதுகாப்பு சபையின் வட கிழக்கு மாகாணங்களுக்கான சிரேஷ்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு.பி.பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக பாதுகாப்பு சபையின் மதிப்பிற்குரிய தலைவருமான திரு. சமன் ஹண்டாரகம அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் திரு.K.A.S.P. களுவாராச்சி அவர்களும்  சமூக பாதுகாப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் திரு.எஸ்.டபிள்யூ. லக்ஷ்மன் அவர்களும் கலந்து கொண்டனர். கெளரவ அதிதிகளாக சமூக பாதுகாப்பு சபையின்  மேம்படுத்தல் முகாமையாளர் திரு.டி.எஸ்.லக்மால் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கான சிரேஷ்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு.ரஞ்சித் தேசனாயக்க ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. ஜே.எம்.ஏ. டக்லஸ் அவர்களும் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.வீ.ஜெகதீசன் அவர்களும் மேலும் பல பிரமுகர்களும் பங்குபற்றினர்.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top