நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றல் - 2023
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதேச செயலாளராக செல்வி.இ.இராகுலநாயகி அவர்கள் ஆகஸ்ட் 02 ஆம் திகதி அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பிரதேச செயலாளரை உத்தியோகபூர்வ ரீதியாக வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. உதவிப் பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் திரு.க.ரிஸ்வி யாஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பு.நித்தியானந்தன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் ஆகியோர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும், ஏனைய அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டு புதிதாக கடமையேற்ற பிரதேச செயலாளருக்கான தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





~s















