கிராம மட்டத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பான பயிற்சிநெறி

போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களை புனர்வாழ்வு சிகிச்சைக்கு வழிப்படுத்துவது தொடர்பாக கிராம மட்டத்தில் சேவையாற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு 2023.09.25 ஆந் திகதியன்று நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் மேலும் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் M.M.G.B.H ரசாட் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று Islamic Relief நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

1

2

3

4

5

~s

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top