சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் - 2023
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வானது 2023.10.04 ஆந் திகதியன்று சவளக்கடை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிப் பாடசாலை மாணவர்கள், சிறுவர் கழக அங்கத்தவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளான சிறுவர்களின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்கள், Deaflink, SWOAD, ADWN போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து முகமட் சஜித் (முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர்), J.ஜெசிலா பர்வீன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) போன்ற அலுவலக உத்தியோகத்தர்களும் இந்நிகழ்விற்கான அனுசரணையினை வழங்கியிருந்தனர். பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பு.நித்தியானந்தன் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் மேலும் கிராம அலுவலர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ஏனைய வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








Click here to view an image gallery of the event.















