போதைப்பொருள் பாவனையால் பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் வன்முறைகள் அதனை தவிர்க்கும் வழிமுறைகள் தொடர்பான வீதி நாடகம்
நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதைப் பொருள் பாவனையால் பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் வன்முறைகள் மற்றும் அதனை தவிர்க்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் 2023.10.17 ஆந் திகதியன்று நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்தியமுகாம்-02 கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
இவ்வீதி நாடகத்தை அக்கரைப்பற்று அருவி நாடக குழுவினர் வழங்கினர். பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திருமதி.U.l.ஹபீலா மற்றும் அவ் அலுவலக உத்தியோகத்தர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் M.M.G.B.H ரசாட், அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான அம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர் திரு.I.L.M.இர்பான், மத்திய முகாம் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மத்தியமுகாம் 1,2,3,4, சாளம்பைக்கேணி-4 கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் குறித்த கிராம பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பார்வையிட்டனர்.




















