76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் - 2024
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலக வளாகத்தில் 2024.02.04 ஆந் திகதியன்று சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ரா. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் இலங்கை திருநாட்டின் இன மத பல்லினத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடையில் பாடசாலை சிறுவர்களும் பங்குபற்றினர். இதன்போது பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளரினால் மரநடுகை செய்யப்பட்டதுடன் சுதந்திர தினம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யாஹ்சர், நிருவாக உத்தியோகத்தர் திரு. கி. யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு. செ. சிவம், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. பு. நித்தியானந்தன் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் சகல பிரிவுகளினதும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் மரநடுகை, சிரமதானம் உள்ளிட்ட நிகழ்வுகளும் கிராம மட்டத்தில் இடம்பெற்றன.

























