சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா-2024

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து நடாத்திய SMART YOUTH இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மத்தியமுகாம்-05, றாணமடு இந்து கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி. R.சஜிந்ரன் தலைமையில் 2024.04.27 ஆந் திகதியன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே. ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

பாரம்பரிய புத்தாக்க பண்பாட்டுக்  கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருபாலருக்குமான விளையாட்டு விழாக்கள் இடம்பெற்றதுடன், பிரதேச மட்ட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இங்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

மேலும் இந்நிகழ்வில்,  உதவி பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா, சமுர்த்தி தலைமையக  முகாமையாளர் திரு.செ. சிவம் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர், கால்நடை வைத்திய அதிகாரி, மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அன்னமலை இராணுவ முகாம் பதில் கட்டளை இடும் அதிகாரி, பிரதேச சபை செயலாளர்,  இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது அலுவலக பொறுப்பதிகாரி, பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், இளைஞர் சேவை உத்தியோகத்தர் போன்ற அரச உத்தியோகத்தர்களும் பிரதேசத்தின் விளையாட்டு கழகங்கள் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

sports meet 2024 1

sports meet 2024 2

sports meet 2024 3

sports meet 2024 4

sports meet 2024 5

sports meet 2024 6

sports meet 2024 7

sports meet 2024 8

sports meet 2024 9

sports meet 2024 10

sports meet 2024 11

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top