நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதல் சனாதிபதி நிதிய இருதய சத்திர சிகிச்சை உதவி 300,000 ரூபாய் வழங்கல்
சனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டு நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளை நேரடியாக பிரதேச செயலகங்கள் மூலமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் மூலமாக நாவிதன்வௌி பிரதேச செயலகப்பிரிவில் முதலாவதாக மத்தியமுகாம்-06 கிராம அலுவவர் பிரிவினை சேர்ந்த பயனாளிக்கான இருதய சத்திர சிகிச்சைக்கான 300,000 ரூபாய்க்கான மருத்துவ உதவிக் கொடுப்பனவு கிடைக்கப்பெற்றது.
இதற்க்கான காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நாவிதன்வௌி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. மனோஜ் இந்ரஜித், சமூக சேவை உத்தியோகத்தர் திரு. கு. குணரெட்ணம், கிராம அலுவலர் A.A. வசீமா பானு, விடய உத்தியோகத்தர் திருமதி. த. மயூரதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.















