பிரதேச செயலக 74வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்

இலங்கையின் 74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதான சுதந்திர தின நிகழ்வுகள்  பிரதேச செயலக வளாகத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

நாவிதன்வெளி  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்காக இரு நிமிட நேரம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது சுதந்திர தினம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி  தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம்,  சமுர்த்தி  முகாமையாளர்கள் உட்பட  சகல பிரிவுகளினதும் பிரதம முகாமைத்துவ  சேவை  உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் சுதந்திர நிகழ்வுகள் இடம்பெற்றன.

1.

2

3

5

6

7

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top