"அகன்று செல்" எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம் நாவிதன்வௌி பிரதேச செயலகத்தில் ஆரம்பம்

போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான சனாதிபதி செயலகத்தின் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டின் “அகன்று செல்” எனும் தொனிப்பொருளிலான தேசிய ​வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு பிரதேச செயலக மட்டத்திலான விழிப்புணர்வு பேரணியும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

அனர்த்த முன்னாயத்த நிலை தொடர்பான கலந்துரையாடல்

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைகாலத்தின் போதான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் நாவிதன்வௌி கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 2025.10.16ஆம் திகதி இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதல் சனாதிபதி நிதிய இருதய சத்திர சிகிச்சை உதவி 300,000 ரூபாய் வழங்கல்

சனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டு நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளை நேரடியாக பிரதேச செயலகங்கள் மூலமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் மூலமாக நாவிதன்வௌி பிரதேச செயலகப்பிரிவில் முதலாவதாக மத்தியமுகாம்-06 கிராம அலுவவர் பிரிவினை சேர்ந்த பயனாளிக்கான இருதய சத்திர சிகிச்சைக்கான 300,000 ரூபாய்க்கான மருத்துவ உதவிக் கொடுப்பனவு கிடைக்கப்பெற்றது.

நாவிதன்வௌி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை நிகழ்வு

நாவிதன்வௌி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் திரு. பே. பிரணவரூபன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2025 செப்டம்பர் 02 ஆம் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

77ஆவது சுதந்திர தின நிகழ்வு மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய அலுவலக சீருடை அறிமுகம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதான சுதந்திர தின நிகழ்வு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக சீருடை அறிமுக நிகழ்வு ஆகியன பிரதேச செயலக வளாகத்தில் 2025 பெப்ரவரி 04 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top