சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா-2024
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து நடாத்திய SMART YOUTH இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மத்தியமுகாம்-05, றாணமடு இந்து கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி. R.சஜிந்ரன் தலைமையில் 2024.04.27 ஆந் திகதியன்று நடைபெற்றது.
மெழுகுதிரி உற்பத்தி செய்யும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் நெசவு உற்பத்தியினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கான நூல் வழங்கும் நிகழ்வு
நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் இழப்பீடுகளுக்கான அலுவலக நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து "நம்பிக்கைக்கான நூல்" மற்றும் "வாழ்க்கைக்கான வெளிச்சம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராம அலுவலர் பிரிவில் மெழுகுதிரி உற்பத்தி செய்யும் பயனாளிகளுக்கான
76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் - 2024
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலக வளாகத்தில் 2024.02.04 ஆந் திகதியன்று சிறப்பாக இடம்பெற்றது.
"அஸ்வெசும" 2024
2002 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரிவு 7 (1) இன் படி, “அஸ்வெசும” நலன்புரி அனுகூலங்கள் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு தகுதி பெற்ற நபர்களை/குடும்பங்களை அடையாளம் காண்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தீர்மானித்துள்ளது.
வர்ண விருதுகள் 2024
நாவிதன்வௌி பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, சிறந்த அடைவுமட்டங்களை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவர்கள், பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனைய துறைசார் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைக்கும் வர்ண விருதுகள் (Colours Awards - 2024) நிகழ்வானது 2024.01.18 ஆந் திகதி நாவிதன்வௌி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.















