2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2024 ஆம் ஆண்டின் முதலாம் அலுவலக நாளாகிய 2024.01.01 ஆந் திகதியன்று இந்த ஆண்டின் கடமைச்செயற்பாடுகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக பெயர்ப்பலகை நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்- 2023

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக, பிரதேச செயலக பெயர்ப்பலகைக்கான நிர்மாண பணிகள் 2023.12.05 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலக உணவுத்திட்டம் மூலமான உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் 2023.11.09 ஆந் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் இரா. ராகுலநாயகி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வானது 2023.11.20 ஆந் திகதியன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

வாணி விழா - 2023

நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த வாணி விழா நிகழ்வானது 2023.10.24 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top