நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 2026 ஜூலை 27ஆம் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ் “QUEEN KIDDANGI PARK” பாரம்பரிய கால்வாய் படகுச் சவாரி திட்டம் ஆரம்பித்து வைப்பு

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவின் சவளக்கடை மற்றும் சொறிக்கல்முனை-01 கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்த வகையில் “QUEEN KIDDANGI PARK” எனும் பெயரிலான பாரம்பரிய கால்வாய் படகுச் சவாரி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 ஜூன் 02 ஆம் திகதி இடம்பெற்றது.

நலன்புரி நன்மைகள் சபையின் எண்ணீட்டு செயற்பாடுகளுக்காக கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவில் நலன்புரி நன்மைகள் சபையின் எண்ணீட்டு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களினால் 2026 ஜனவரி 19 ஆம் திகதியன்று வழங்கிவைக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின விழா மற்றும் உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதான சுதந்திர தின நிகழ்வு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக சீருடை அறிமுக நிகழ்வு ஆகியன பிரதேச செயலக வளாகத்தில் 2026 பெப்ரவரி 04 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

2026 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2026 ஆம் ஆண்டின் முதலாம் அலுவலக நாளாகிய 2026 ஜனவரி 01 ஆம் திகதியன்று இந்த ஆண்டின் கடமைச்செயற்பாடுகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top