பிரதேச சிறுவர் அபிவிருத்தி, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான செயலணி, உளச்சமூக ஒன்றியம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்
எமது பிரதேச செயலகப்பிரிவில் உள்ள சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் 2023.09.13 ஆந் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றல் - 2023
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதேச செயலாளராக செல்வி.இ.இராகுலநாயகி அவர்கள் ஆகஸ்ட் 02 ஆம் திகதி அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க: நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றல் - 2023
இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - 2023
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) 150 மணித்தியாலங்களை கொண்ட பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இம்மாதம் 11ஆந் திகதியன்று இடம்பெற்றது. இதில் பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் குறித்த பாடநெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
பிரதேச செயலாளருக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் - 2023
எமது பிரதேச செயலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி தனது நிறைவான சேவையை நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்கள் இடமாற்றலாகி செல்வதனை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் ஜூலை 31ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும் படிக்க: பிரதேச செயலாளருக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் - 2023
வருடாந்த உகந்தை முருகன் ஆலய சிரமதான நிகழ்வு - 2023
உகந்தை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு வருடந்தோறும் எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் இவ்வருடமும்உகந்தை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு வருடந்தோறும் எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் இவ்வருடமும்மே மாதம் 27ஆம் திகதியன்று குறித்த ஆலய பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் படிக்க: வருடாந்த உகந்தை முருகன் ஆலய சிரமதான நிகழ்வு - 2023















